அபர்ணதி….
தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் என்னும் தமிழ் தொலைக்காட்சியில், ஆர்யா ஹோஸ்ட் செய்து ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான நிகழ்ச்சிதான் எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியில் ஆர்யா தன்னுடைய திருமணத்திற்கு பெண் தேடினார்.
இதில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஒருவர் அபர்ணதி. இவரை தான் ஆர்யா திருமணம் செய்வார் என பல மக்களால் நம்பப்பட்டது. ஏனென்றால் இவருக்கும் ஆர்யாவுக்கும் நல்ல காம்பினேஷன் இருந்தது.
ஆனால் ஆர்யா எதிர்பாராத விதமாக 16 பெண்களையும் ரிஜக்ட் செய்தார். அதன் பின்னர் பிரபல நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், அபர்ணதி ஜெயில் என்னும் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
தற்போது அபர்ணதி அவரது இன்ஸ்டாகிராம் Profile-ஐ Abarnathy_6ya என்று ஆர்யாவை சுட்டிக்காட்டும் வகையில் மாற்றியுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள், “இன்னுமா ஆர்யாவை மறக்கல?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.