நடிகை தமன்னாவுக்கு கொரோனா : தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

68

நடிகை தமன்னா…….

நடிகை தமன்னாவுக்கு கொரோனா உறுதியானதால் ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்களை மட்டுமல்லாது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது.

அந்த வகையில் தமிழ் தெலுங்கு, கன்னடம், இந்தி என பெரும்பாலான மொழிகளில் நடித்து வரும் தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதியானதும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா பிடியில் பிரபலங்கள் சிக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.