“சனம் Vs ஷிவானி நாராயணன்” – Corner செய்யப்படும் ஷிவானி நாராயணன் ! வெளியான Promo !

766

ஷிவானி நாராயணன்…

பல நாளிதழ் பத்திரிக்கைகள், பல இணையதள பத்திரிகைகள் கண்டன்ட் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இந்த நேரத்தில் தெய்வமாக வந்து இருக்கிறது இந்த Big Boss-4. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 நேற்று வெற்றிகரமாகவே தொடங்கி இருக்கு என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் வந்த ஐந்து நிமிடத்திலேயே சனம் ஷெட்டி உடன் ஓரண்டை இழுத்தார் நம்ம ரேகா.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பல சண்டைகளை பார்த்து உள்ளது. ஆனால் எந்த சீசனிலும் முதல் நாளே சண்டை வந்ததில்லை, அதற்காகவே பிள்ளையார் சுழி போட்டு அற்புதமாக தொடங்கி வைக்கிறார் நம்ம ரேகா.

பிக் பாஸ் வீட்டிற்குள், யாராவது கார்னர் செய்யப்படுவது சகஜமான விஷயமாகிவிட்டது. அதுவும் நாம் எல்லாம் மனித்ததால் ஒன்றாக இருக்க வேண்டிய இந்த Corona காலகட்டத்திலும் இது நடப்பது சற்று வருத்தமே.

என்ன நடந்தது என்றால், ஷிவானி நாராயணன் வயது 19 ஆகும். ஆனால் வீட்டில் இருப்பவர்களின் வயது முப்பது முப்பத்தைந்து தாண்டியே இருக்கிறது.

இதனால் ஷிவானிக்கு அவர்களுடன் பழக சற்று Uncomfortableஆக இருக்கிறது. இதனால் அவர் யாருடனும் சரியாக பேசவில்லை என்று முத்திரை குத்தப்படுகிறார்.

அதிலும் சுரேஷ் சக்கரவர்த்தி அவரை பார்த்து, “ஏன் மூஞ்சியை இப்படி வச்சுருக்க?, என்ன மூஞ்சி இது?” எல்லார் முன்னாடியும் மூஞ்சியில் அடித்தார் போல் கேட்டு விட்டார்.

பொறுத்திருந்து பார்ப்போம் ஷிவானி தொடங்குகிறார்களா என்று…