கலாச்சாரத்தை கெடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்கள் : கமலுக்கு மி ரட்டல்!!

985

பிக்பாஸ் நிகழ்ச்சி

கலாச்சாரத்தை கெடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தி கொள்ளவில்லை என்றால் வேலையை காட்ட வேண்டி இருக்கும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ் கலாசாரத்தைக் கெடுக்கும் டி.வி நிகழ்ச்சியை நடத்திவரும் கமல்ஹாசன், தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், எங்கள் வேலையைக் காட்டுவோம் என்று மேடையிலேயே பகிரங்க மி ரட்டல் விடுத்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.

இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், ஒரு தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார் அவர்.

அதில், அது வேண்டுகோள்தான்… மி ரட்டல் அல்ல. ஏற்கெனவே ஒருமுறை அதே டி.வி-யில் ‘கேரளப் பெண்கள் அழகா… தமிழகப் பெண்கள் அழகா என்று விவாதம் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானதும் இது போன்று ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தோம் என தெரிவித்துள்ளார்.