பிக்பாஸில் போட்டியாளர்களுக்கு சம்பளம் எப்படி கொடுக்கப்படுகிறது? கோபத்தில் உளறி கொட்டிய கவின்!!

1116

உளறிய கவின்

பிக்பாஸ் வீட்டில் இப்போது இருக்கும் மிகப் பெரிய பிரச்சனையே ஷாக்சி -கவீன் தான் , இவர்கள் இருவரால் பிக்பாஸே இப்போது சூடுபிடித்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.

அந்தளவிற்கு இருவரும் சரியான கண்டெண்ட் கொடுத்து வருகின்றனர். இதனால் விஜய் டிவியின் டி.ஆர்.பியும் எகிறிக் கொண்டே போகிறது. இந்நிலையில் நேற்றைய எபிசோடின் போது ஷாக்சிக்கும், கவீனுக்கும் இடையே இருந்த விரிசல் மிகவும் பெரிதானதால், கவீன் ஒரு கட்டத்தில் ஷாக்சியிடம் நீ நல்லா இரு, நீ ஒரு பெண் என்னிடம் இனிமேல் பேசாதே என்று ஒதுங்கினார்.

அதன் பின் நான் இந்த வீட்டில் 7 வாரம் டார்கெட் செய்து வந்தேன், ஏனெனில் எனக்கு கடன் இருக்கிறது. 6 வாரத்தை கடந்து விட்டேன், இன்னும் ஒரு வாரம் தான் பார்த்துக் கொள்ளலாம் என்று மதுமிதாவிடம் மிகவும் வேதனையுடன் கூறினார்.

அப்போது பிக்பாஸ் வீட்டில் வருபவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு பின் வாரத்திற்கு ஏற்ற வகையில் போட்டியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருவது இதன் மூலம் தெரியவந்துள்ளது.