திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக பிக்பாஸ் புகழ் நடிகர் மீது நடிகை அளித்த புகார்: சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு!!

50

தர்ஷனுக்கு சம்மன்………

காதலித்து நிச்சயம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக பிக்பாஸ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரில் போலீசார் தர்ஷனுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றவர் நடிகர் தர்ஷன். இவர் மீது நடிகை சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். தற்போது சனம் ஷெட்டி பிக்பாஸ் – 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், காதலித்து நிச்சயம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக சனம் ஷெட்டி அளித்த புகாரில் தர்ஷனுக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தர்ஷனுக்காக ரூ.2 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவு செய்ததாகவும், காதலித்து ஏமாற்றியதாகவும், அவதூறு பரப்பியதாகவும் சனம் ஷெட்டி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, நடிகர் தர்ஷன் மீது சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு ஆஜராகுமாறு, இலங்கையை சேர்ந்த தர்ஷனின் சென்னை வீட்டு முகவரிக்கு போலீசார் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.