மீண்டும் அப்பாவாகிறார் நடிகர் கார்த்தி..!

75

கார்த்தி…

தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார் கார்த்தி, இவரின் அண்ணன் சூர்யா மார்கெட் சற்று டல் அடித்தாலும், இவர் தற்போது ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறார்.

தீரன், கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் சினிமாவில் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக நுழைந்துள்ளார்.

பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்தி. முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனராக ஆக வேண்டும் என்பது தான் ஆசை.

கார்த்தி அவர்கள் முதன் முதலாக பிரபல இயக்குனர் மணிரத்தினத்திடம் தான் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

கார்த்தி அவர்கள் 2011 ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு மகள் பிறந்தாள்.

மகளின் பெயர் உமையாள். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தாண்டு லாக்டவுனில் மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறார் கார்த்தியின் மனைவி. அதனால் சொந்த ஊரான கவுண்டம்பாளையம் சென்றுவிட்டார்கள்.

நடிகர் கார்த்தியும் மனைவியோடு கிராமத்தில்தான் இருக்கிறார். விரைவில் இவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனையில் குழந்தைப் பிறக்க இருக்கிறது.