கவின்-ஷாக்சி விஷயத்தில் பொய் பேசி மாட்டிக் கொண்ட லாஸ்லியா!!

982

மாட்டிக் கொண்ட லாஸ்லியா

பிக்பாஸில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக இருந்த லாஸ்லியா கொஞ்சம், கொஞ்சமாக மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளராக மாறி வருகிறார். போட்டியாளர்கள் பலரும் முன்பிருந்த லாஸ்லியா இது கிடையாது, அவள் மொத்தமாக மாறிவிட்டாள் என்று கூறி வருகின்றனர்.

நேற்று கூட, கவீன்-ஷாக்சி விஷயத்தில் இருவரும் என்னிடம் வந்து அவர்களுடைய உணர்வுகளைப் பற்றி பகிரவே இல்லை என்று கூறினார். குறிப்பாக ஷாக்சி கவினிடம் எந்தளவிற்கு இருக்கிறேன் என்பதைப் பற்றி கூறவேயில்லை என்று கூறினார்.

இந்நிலையில் ஷாக்சி மற்றும் கவீன் இருவருமே தாங்கள் என்ன செய்தோம், எப்படி இருந்தோம், அதன் பின் ஏன் பிரிந்தோம் என்பதை கூறியுள்ளனர்.

அந்த வீடியோக்களை இணையவாசிகள் ஒன்றாக சேர்த்து வைத்து எடிட் செய்து வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் இப்படி மாட்டிக்கிட்டாங்களே லாஸ்லியா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.