மீண்டும் லோஸ்லியாவை கொஞ்ச ஆரம்பித்த கவின் : கோபமடைந்த சாண்டி!!

1015

கோபமடைந்த சாண்டி

பிக்பாஸ் வீட்டில் நேற்று வரை முக்கோண காதல் பிரச்சினையால் தகித்துக்கொண்டிருந்த பிக் பாஸ் வீட்டில், இன்றில் இருந்து வேறுவிதமான பிரச்சினைகள் ஆரம்பித்துள்ளன. சித்தப்பு சரவணனுக்கும், சேரனுக்கும் இன்று புதிய பிரச்சனை வெடித்தது. அதில், சித்தப்பு சேரானைப் பார்த்து மரியாதை இல்லாமல் பேசினார்.

இதனால், சிறிது நேரம் பிக்பாஸ் வீடு பரபரப்பாக இருந்த நிலையில், இந்த வாரம் டாஸ்க்கில் சரியாக பெர்ஃபாம் பன்னாதவர்கள் ஜெயிலில் இருக்க வேண்டும் என்று கூற லோஸ்லியாவையும், செரினையும் கேப்டன் தர்ஷன் செலக்ட் செய்தார்.

இந்நிலையில், ஜெயிலுக்கு செல்லும் லோஸ்லியாவை கவின் பார்த்து பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த சாண்டி, பேசமாட்டேன், என்று கூறிவிட்டு அந்த பெண்ணுடன் ஏன் பேசினாய் என்று கேட்க, உடனே கவின் அந்த பொண்ணை பார்த்தால் பாவமாக இருந்தது. அதனால் தான் பேசினேன்.

கடந்த முறை ஜெயிலுக்கு போய் வந்ததில், அவளுக்கு உடம்பு சரியில்லை. பார்க்க பாவமாக இருந்தது, அதனால் தான் பேசினேன் வேர ஒன்னுமில்லை என்று கூறியுள்ளார்.