நான் காசில்லாமல் நடுரோட்டில் இருந்தபோது சேரன் அவமானப்படுத்தினார் : பழைய கதையை கூறிய சரவணன்!!

807

சரவணன் – சேரன்

பிக்பாஸில் நேற்று நடிகர் சரவணன் மற்றும் இயக்குனர் சேரன் இடையே பெரிய சண்டை வெடித்தது. வாயா போயா.. லூசு… என சரவணன் கோபத்தில் பேசினார்.

அதன் பிறகு சரவணன் இயக்குனர் சேரன் பற்றி பல விஷயங்களை கூறினார். “நான் ஹீரோவாக இருந்தபோது சாதாரண அசிஸ்டென்ட் டைரக்டராக ஆபிசில் வந்து உட்கார்ந்திருந்தவர் சேரன்” என கூறினார் சரவணன்.

1999ல் நான் பெரிய நஷ்டப்பட்டு கையில் காசில்லாமல் செங்கல்பட்டுக்கு அருகில் நடுரோட்டில் பஞ்சர் ஆனதால் நின்று கொண்டிருந்தேன். என் வண்டியை பார்த்துவிட்டு சேரன் உடன் இருந்த சிலர் வண்டியை நிறுத்தி என்னிடம் பேசினர்.

அவர்கள் கிளம்பும்போது நான் சேரனை பார்த்து “சார் உங்க படத்தில் நடிக்க சான்ஸ் இருந்த கொடுங்க” என கேட்டேன். அதற்கு அவர் “நீங்கள் எவ்வளோ உயரத்தை அடைந்துவிட்டிர்கள். எவ்வளவோ நடித்துவிட்டிர்கள். பிறகு என்கிட்டே எதற்கு சினிமா சான்ஸ் கேட்கிறீங்க” என சொன்னார். அப்போ எனக்கு எவ்ளோ வலித்தது என தெரியாது என சரவணன் உருக்கமாக பேசினார்.