சண்டைக்காட்சி படப்பிடிப்பில் பலத்த அடி: தீவிர சிகிச்சைப் பிரிவில் தனுஷின் வில்லன் அனுமதி !

64

டொவினோ தாமஸ்…

மலையாள இயக்குனர் ரோஹித் இயக்கத்தில் டொவினோ தாமஸ் ஹீரோவாக நடித்து வரும் படம் களா.

வழக்கம்போல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் 6,7 மாதங்களுக்குப் பிறகு திரைப்படப் படப்பிடிப்புகளுக்கான அனுமதியை மத்திய அரசு 75 முதல் 100 ஆட்களை வைத்து ஷூட்டிங் தொடர உத்தரவிட்டுள்ளது.

அதனால் கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகி தற்போது ஒரு மாத காலமாக நடந்து வந்தது.

ஆனால் இன்று திருஷ்டியாக சண்டைக்காட்சி ஒன்று படமாக்க படும்போது டொவினோவுக்கு அடிவயிற்றில் அடிபட்டது.

சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டொவினோ, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

பல மணி நேரங்களாக தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது.