தன் வாழ்க்கையில் நடந்த பெரிய துயரத்தை கூட Big Boss-இல் சிரித்துக்கொண்டே கூறிய ரம்யா பாண்டியன் !!

603

ரம்யா பாண்டியன்……

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.

சமீபத்தில், இவர் Big Boss 4 – இல் பங்குபெற்று முதல் வார தலைவியாக பதவி ஏற்றார். இந்தநிலையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அழுகாச்சி டாஸ்கில், ரம்யா பாண்டியன் கூறியது,

எனது அப்பாவுக்கு பாம்பு கடித்து, அவருடைய உடல் நிலை மோசமாகிக் கொண்டே வந்தது, அதன் பின் அவரது உடலின் ஒவ்வொரு பகுதியாக மோசமாகி ஒரு கட்டத்தில் அவர் இறந்து போனார். அதனால் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.

சத்யம் தியேட்டரின் வாசலில் பாம்ப்ளட் கொடுக்கும் வேலைக்கு 2500 ரூபாய்க்கு சேர்ந்ததாகவும் அந்த பணம் அப்போது தனக்கு பெரிதாக இருந்தது என்றும் ரம்யா கூறினார். போதாக்குறைக்கு ஜோக்கர் படம் தேசிய விருது பெற்று பெரும் புகழை பெற்றாலும் அந்த படத்தால் தனக்கு எந்தவித லாபமும் இல்லை என்றும்,

தன்னுடைய வாழ்க்கையை திசை திருப்பியது ஒரே ஒரு போட்டோ தான் என்றும், அது ஏன் வைரலானது என்றே எனக்கு தெரியவில்லை” என்று அவரது செம்ம Famous இடுப்பு போட்டோஷூட்டை பற்றி சோகத்தை வெளிக்காட்டாமல் சிரித்துக்கொண்டே கூறினார்.