“எனக்கு அப்படியே ஏறுது…” டென்ஷனான கேப்ரியலா ! நடந்தது என்ன ?

169

கேப்ரியலா…..

வழக்கம் போல் தினமும் போட்டியாளர்கள் மத்தியில் கொளுத்தி போடும் Big Boss, நேற்றும் சூப்பராக ஒன்றை கொளுத்தி போட்டுள்ளார். நேற்று நடைபெற்ற கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கில் ரியோ, வேல்முருகன், கேப்ரியலா மூவரும் கலந்து கொண்டனர்.

இதில் மற்ற போட்டியாளர்களுக்கு நிறைய பேர் ஆதரவு கொடுக்க, நம்ம கேப்ரியலாவுக்கு, தாத்தா சுரேஷ் சக்கரவர்த்தி மட்டுமே கையை தூக்கினார்.

தூக்கினது மட்டுமில்லாமல் நேற்று இவரது செயலை பார்த்த ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

கடைசியில் ரியோ தலைவராக தேர்ந்தெடுக்க பட, உடனே போட்டி முடிந்தபின் எனக்கு ஏன் Support செய்யவில்லை என ஆஜித், பாலாஜியிடம் சண்டை போட்டார் Gabbie. “உனக்கு இப்போது கேப்டன் பதவி தேவையில்லை” என அவரை சமாதானம் செய்ய முயற்சிக்க, அப்போது ரியோ குறித்து கேப்ரியலா, ”எனக்கு இதை அப்படியே ரியோ அண்ணன் கிட்ட சொல்லணும் போல இருக்கு, எல்லாத்தையும் முடிச்சிட்டு எனக்கு கில்டியா இருக்கு, ஆசையே படலன்னு சொல்றாரு. எனக்கு அப்டியே ஏறுது,” என அந்த இருவரிடமும் சொல்கிறார் கேப்ரியலா.