எனக்கும் ரசிகர்கள் கோவில் கட்டுவார்கள் : நடிகை ராஷ்மிகா!!

789

நடிகை ராஷ்மிகா

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா, எனக்கும் ரசிகர்கள் கோவில் கட்டினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

கன்னடத்தில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி கதாநாயகியாகி இருக்கிறார் ராஷ்மிகா. தமிழில் தற்போது கார்த்தி படத்திலும் அதை தொடர்ந்து விஜய் படத்திலும் நடிக்க உள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘நடிக்க தொடங்கியபோது மக்களுக்கு என் முகம் நினைவில் நிற்குமா என்பதுகூட தெரியாது. முயற்சி செய்யலாம் என்றுதான் சினிமா வாழ்க்கையை தொடங்கினேன். முதல் பட வெற்றிக்கு பிறகு வரிசையாக வாய்ப்புகள் குவிகின்றன.

விறுவிறுவென்று மேலே சென்று பின் உடனே வீழக் கூடாது. ஒவ்வொரு படத்தையும் கவனமாக ஒப்புக்கொண்டு அவற்றிலிருந்து கற்க முயல்கிறேன். ஒருவரைப் பிடித்துவிட்டால் அவருக்காக கோவில் கட்டும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

என் அப்பா குஷ்புவுக்குக் கோயில் கட்டியதைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருப்பார். என்னால் இப்போதுவரை நம்ப முடியவில்லை. எனக்கும் கோவில் கட்டினால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருக்கிறேன்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.