ரேகா Evictionகக்கு தான் பாலாஜி கதறி அழுதாரா ? MEME போட்டு வச்சு செய்யும் நெட்டிசன்ஸ் !

56

பிக்பாஸ் 4….

பிக்பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக ரேகா தான் வெளியேறினார் என்பது எல்லோருக்கும் முன்பே தெரிந்து விட்டது. இதனால் Eviction Episode அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை.

இருந்தாலும் அவர் வீட்டைவிட்டு வெளியில் போகும்போது அவருக்காக அனைவரும் கண்ணீர் சிந்தியது பார்க்க செயற்கையாக இருந்தது.

அதிலும் ஷிவானி, ரேகாவின் Eviction தாங்காமல் சத்தம்போட்டு அழுதார். ஷிவானியை மிஞ்சும் அளவுக்கு பாலாஜியும் கதறிக்கதறி அழுதார்.

பாலாஜியின் அழுகையை பார்த்து பரவாலியே கொஞ்சம் நல்லவரா இருப்பாரு போலயே என ரசிகர்கள் கருதும் நேரத்தில்,

அவர் எதற்காக இப்படி அழுதார் என்று தற்போது மீம் ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது சனம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்த்து அது நடக்காத காரியத்தால் தான் பாலாஜி அப்படி கதறி அழுதாராம்.