“இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கல, நடந்துடுச்சு” பீட்டர் பாலை பிரிந்தது பற்றி வனிதா Open Talk !

61

வனிதா…

வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து, அதன் பிறகு இவருக்கு ஏகப்பட்ட பிரச்சனை. இந்தநிலையில், நேற்று வனிதா பீட்டர் பாலை அடித்து துரத்திவுட்டதாக ஒரு தகவல் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து டிவிட்டரில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், “காதலில் தோல்வி அடைவது எனக்கு பழக்கம் ஆகிவிட்டது. ஆனால் நான் எப்பொழுதுமே அதை தாண்டி வந்து தைரியமாக இருப்பேன்.

காதலித்து, அதன் பிறகு ஏமாற்றம் அடைவது தான் மிகவும் வேதனையாகவும், அந்த வலியை தாங்க முடியாமலும் இருக்கிறது. உங்கள் கண் முன்பு வாழ்க்கை பறிபோவது தான் மிகவும் வேதனையானது.

அதை நான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது நடந்திருக்கக் கூடாது என்று நான் சொல்ல முடியாது. ஏனென்றால் வாழ்க்கை ஒரு பாடம். நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் தைரியமாக இருக்கிறேன்.

போலி செய்திகளை படித்துவிட்டு நீங்களாக ஏதாவது பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் நான் யாருக்கும் இதற்கு மேல் விளக்கம் அளிக்க வேண்டியது இல்லை. ஏனென்றால் இது என் வாழ்க்கை. நான் தான் எதிர்கொள்ள வேண்டும்.

என் பார்ட்னரை எக்ஸ்போஸ் செய்து, குறை சொல்லி நான் அதன் மூலம் நல்லவர் போன்று தெரிய, சிம்பதி பெற விரும்பவில்லை. இதை நான் எதிர்பார்க்கவில்லை ஆனால் நடந்துவிட்டது. என் குழந்தைகளின் நலனை மனதில் வைத்து நல்ல முடிவை எடுப்பேன். அதிசயம் நடக்க பிரார்த்தனை செய்கிறேன். அப்படி நடக்காவிட்டால் நான் எதிர்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது, பீட்டருக்கும், வனிதாவுக்கும் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது.