14 வயதில் நடித்த படம்..வெளியான ஆபாச காட்சி…அதிர்ந்த சட்டக்கல்லூரி மாணவி…!!

218

சோனா எம்.ஆப்ரஹாம்…

கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி தனது 14 வயதில் படத்தில் நடித்த ஆ பாச காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியானதால் த ற்கொ லைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி சோனா எம்.ஆப்ரஹாம். இவர் தனது 14 வயதில் பார்சேல் என்ற படத்தில் நடித்துள்ளார். சதீஷ் அனந்தபுரி இயக்கிய அந்த படத்தில் படமாக்கப்பட்ட ஒரு காட்சி தற்போது ஆ பாச இணையதளங்களில் வெளியாகி கடும் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி வீடியோ ஒன்றை வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இணையத்தில் உலா வரும் ஆ பாச காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த மாணவி கூறுகையில், ஒரு வெறுக்கத்தக்க படத்தில் நான் நடித்ததை நினைத்து இன்றும் வருத்தமாக உள்ளது. பெண்களை தவறாக சித்தரிக்கும் கூறுகள் அந்த படத்தில் இடம்பெற்றன. அந்த வயதில் எனக்கு படத்தின் கருவையோ, அதன் முக்கியத்துவத்தையோ உணரும் பக்குவம் இல்லை என விவரிக்கிறார் மாணவி சோனா.

படத்திற்காக எடுக்கப்பட்ட அந்த காட்சி திரைப்படத்தில் இடம் பெறவில்லை. ஆனால் தற்போது அந்த காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகிறது. சமூகத்தின் கசப்பான சொற்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சோனா தெரிவித்துள்ளார். மேலும், இதனால் சோனா த ற்கொ லைக்கு முயற்சித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இணையத்தில் இருந்து அந்த காட்சிகளை நீக்க கேரள காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.