“இப்டி விளையாடுறத்துக்கு வேற ஏதாவது பண்ணலாம்” – கோபப்பட்டு கத்திய ஆரி !

64

பிக்பாஸ்4….

பிக்பாஸ் வீட்டில் நேற்று அரக்கர்கள் Vs அரச குடும்பம் டாஸ்க் நடைபெற்றது. இதில் அரக்கர்களின் தலைவராக சுரேஷ் சக்கரவர்த்தியும், அரச குடும்பத்தின் தலைவராக வேல்முருகன், அவருடைய மனைவியாக நிஷாவும் இருந்தனர். மேலும் அரச குடும்பத்தில் ரியோ, பாலாஜி, சோமசேகர், ரம்யா, சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா இடம் பெற்றனர்.

அரக்கர்கள் குடும்பத்தில் ஆஜித், ஷிவானி, கேப்ரியலா, ஆரி, ஜித்தன் ரமேஷ், அனிதா மற்றும் அர்ச்சனா ஆகியோர் இருந்தனர். எப்படியாவது அரக்கர்கள், அரசர்களை அடிமையாக்க வேண்டும். இதுதான் நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க்.

இந்நிலையில் இன்று அப்படியே உல்டாவாக அரக்கர்கள் அரசர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதில் ஆரி மற்றும் பாலாஜி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, “இந்த விளையாட்டை நீங்கள் விளையாட்டுவதற்கு பதில் வேற ஏதாவது செய்யலாம்” என்று ஆரி சொன்னதும் அரக்கர்களாக நடித்துக் கொண்டிருந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனை நாட்கள் அட்வைஸ் மட்டுமே செய்து வந்த ஆரிய முதல்முறையாக கோபப்பட்டது எல்லோருக்கும், ” இதுதான் ஆரியின் உண்மை முகமா ?” என்று யோசிக்க வைக்கிறது. ஆக இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.