ட்விட்டரில் ட்ரெண்டாகும் #14YearsOfVaralaru…!!

102

வரலாறு……….

அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் திரைப்பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படம் வரலாறு. காட்பாதர் என்ற தலைப்பில் இருந்து மாறிய வரலாறு திரைப்படம் 2006ல் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

பல்வேறு பிரச்சனைகள் காரணமாக நீண்ட கால தயாரிப்பில் இருந்தது வரலாறு திரைப்படம். ஆனால் தாமதமாக வெளியாகும் திரைப்படங்கள் தோல்வியை தழுவும் என்ற அந்த கால கட்டத்தின் நம்பிக்கையை உடைத்தெறிந்து புதிய வரலாற்றை படைத்தது இந்த வரலாறு.

அஜித் பருமனாக இருந்த காலகட்டத்தில் தொடங்கி இந்த திரைப்படம், அவர் உடல் எடையை குறைத்த காலத்தில் தான் முடிவடைந்தது. இதனால் பல காட்சிகளில் இரண்டு வித உடல்வாகுடன் காணப்பட்டாலும், 3 வேடங்களில் தனது நடிப்பில் வித்தியாசங்களை காட்டி அந்த வேறுபாட்டை எல்லாம் தள்ளிவைத்தார் அஜித்.

தந்தை, 2 மகன்கள் என 3 வேடங்களிலும் கனக்கச்சிதமாக நடித்திருப்பார் நடிகர் அஜித்.

இத்திரைப்படத்தில் அஜித் காட்டிய நளினமான நடிப்பை வேறு யாராலும் தரமுடியாது என ரசிகர்கள் கொண்டாடினர். அஜித்தின் கலைப்பயணத்திற்கு மைல்கல்லாக அமைந்து பிலிம்பேர் விருதை பெற்றுத்தந்து, திரையரங்குகளில் 200 நாட்களுக்கும் மேல் ஓடி, பாக்ஸ் ஆபிஸ் 65 கோடியை வசூல் செய்து சாதனை படைத்த வரலாறு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மவுசு குறையாத நடிகர் அஜித்தின் வரலாறு திரைப்படத்தை #14YearsOfVaralaru என்ற ஹேஸ்டாக்கில் ட்ரெண்டாக்கியுள்ளனர் ‘தல’ ரசிகர்கள்.