இந்த வருஷ தீபாவளிக்கு நயன்தாரா Fansக்கு செம்ம Treat இருக்கு ! மூக்குத்தி அம்மன் பட Update !

68

நடிகை நயன்தாரா…

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது. அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.

நடிகை நயன்தாராவின் முன்னேற்றத்தை பார்த்து கோலிவுட்டே ஆச்சரியத்தில் இருக்கிறது. திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை மேற்கொண்டு இருக்கும் கதைக்கு ஏற்ற தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். தற்போது நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா தயங்குவது கிடையாது. இவர் கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருந்தார்.

அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. சமீபத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை ஆர்.ஜே. பாலாஜியின் கதை , திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘ மூக்குத்தி அம்மன் ‘ ஆகும்.

இப்போது எப்படியோ படத்தை Successfull-ஆக முடித்துவிட்டு இந்த படம் தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆகும், அமேசான் நெட்ப்ளிக்ஸ்-இல் ரிலீஸ் ஆகாது என்று வாக்குறுதி கொடுத்திருந்தார் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி.

ஆனால் தற்போது தனது சொந்த வீடு போல் இருக்கும் OTT King ஆன Hotstarக்கு விற்றுவிட்டார். அதுவும் வரும் தீபாவளி அன்று இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் Tv Channel King ஆன விஜய் தொலைக்காட்சி இரண்டிலும் ஒரே நாளில் ஒளிபரப்பாக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.