“என் மேல இருந்து கைய எடுங்க” – பிக்பாஸ் வீட்டில் அரக்கர்கள் Vs அரச குடும்பம் !

61

பிக்பாஸ் 4…

தினமும் மனஸ்தாபமும் சண்டையும் ஆக போய்க்கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் நேற்று அரக்கர்கள் Vs அரச குடும்பம் டாஸ்க் நடைபெற்றது. இதில் அரக்கர்களின் தலைவராக சுரேஷ் சக்கரவர்த்தியும், அரச குடும்பத்தின் தலைவராக வேல்முருகன், அவருடைய மனைவியாக நிஷாவும் இருந்தனர். மேலும் அரச குடும்பத்தில் ரியோ, பாலாஜி, சோமசேகர், ரம்யா, சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா இடம் பெற்றனர்.

அரக்கர்கள் குடும்பத்தில் ஆஜித், ஷிவானி, கேப்ரியலா, ஆரி, ஜித்தன் ரமேஷ், அனிதா மற்றும் அர்ச்சனா ஆகியோர் இருந்தனர். என்னடா டாஸ்க் என்றால், அதாவது அரக்கர்கள் குடும்பம் முடிந்தவரை அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சிலையாக இருக்க வேண்டும், அரக்கர்கள் அவர்களுக்கு தொல்லை கொடுத்து அவர்களை கோபத்தை மூட்ட வேண்டும்.

குறிப்பிட்ட நேரம் வரை தாக்குப்பிடித்தால் அவர்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம். இல்லையெனில் அரக்கர்கள் குடும்பத்தினருக்கு அடிமையாக இருக்க வேண்டும். ஆரம்பித்த சில நேரத்தில், பாலாஜிக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் வாக்குவாதம் ஏற்பட, அது சுரேஷ் சக்கரவர்த்தி பாலாஜி மீது கையை வைத்து தனது பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்ல வர, அப்போது பாலாஜி “என் மேல இருந்து கைய எடுங்க” என்று கோபமாக கூறிவிட்டார். அதனால் வழக்கம்போல் களேபரமாக முடிந்தது.