எல்லாம் போச்சு : வருத்தத்தில் ஆல்யா மானசா, சஞ்சீவ் ஜோடி!!

1396

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் என்றாலே பெண்களும், வயதானவர்களும் தான் பார்ப்பார்கள் என்ற நிலையை மாற்றி, இளைஞர்களையும் நெடுந்தொடர் விரும்பிகளாக தற்போது வரும் சீரியல்கள் மாற்றியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், சீரியல்களில் நடிக்கும் முக்கிய நடிகர், நடிகைகள் தான்.

சீரியலில் ஜோடியாக நடிக்கும் பல இளம் ஜோடிகள், நிஜத்திலும் காதலர்களாக, தம்பதிகளாகிவிடுகிறார்கள். அத்துடன், அவர்கள் காதலித்த கதை, டேட்டிங் செய்த தகவல்கள் என அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொள்ள அவர்களை பின் தொடரும், இளசுகள் அவர்கள் நடிக்கும் சீரியல்களையும் பார்க்க தொடங்கிவிடுகிறார்கள்.

அந்த வகையில் சீரியல் உலகில் பிரபலமான ஜோடியாக வலம் வருபவர்கள் ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடி. ‘ராஜா ராணி’ என்ற சீரியலில் நடித்து வரும் இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் நிஜத்திலும் காதலிப்பதை உலகிற்கு அறிவித்திருப்பதோடு, தற்போது திருமணத்திற்கு அவசரப்படவில்லை, என்றும் தெரிவித்தவர்கள், ஜாலியாக ஊர் சுற்றுவது, பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்வது என்று சந்தோஷமாக காதலித்து வருகிறார்கள்.

இப்படி சந்தோஷமான காதல் ஜோடிகளாக இருந்த ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடி தற்போது ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார்கள். அதற்கு காரணம், அவர்களது சீரியல் ஒளிபரப்பாகும் சேனல் தானாம்.

அதாவது, தங்களது சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிப்பவர்களை உற்சாகப்படுத்துவதற்காக சேனல் நிர்வாகம், பிரத்யேகமாக சீரியல் மற்றும் அதில் நடிப்பவர்களுக்கு ஆண்டு தோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. இதை முன்னணி சேனல்கள் சிலர் செய்து வருகின்றது.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியும் ஆண்டு தோறும் விருது வழங்கும் விழா நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது விழா நடைபெற்று முடிந்த நிலையில், சீர்யல் நடிகர்கள் பலர் ஒவ்வொரு பிரிவிலும் விருது வென்றிருக்கிறார்கள். சிலருக்கு எதிர்ப்பார்த்த விருது கிடைக்கவில்லை, பலருக்கு எதிர்பாரத விருது கிடைத்திருக்கிறதாம்.

இந்த நிலையில், ராஜா ராணி புகழ் ஜோடி ஆல்யா மானசா – சஞ்வீவ் தங்களுக்கு சிறந்த ஜோடி பிரிவில் விருது நிச்சயம், என்று எண்ணியிருந்தார்களாம். ஆனால், அந்த விருது ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடிக்கும் செந்தில் – ரக்‌ஷா ஜோடிக்கு விழங்கப்பட்டுவிட்டதாம்.

இந்த சீரியலுக்கு முன்பாகவே ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ சீரியலில் பலரை ஈர்த்த ஜோடியாக கருதப்பட்ட ஆல்யா மானசா – சஞ்சீவ், நிஜத்திலும் காதலர்களாகி மக்களிடம் பிரபலமடைந்த நிலையில், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய விருது வேறு ஒரு ஜோடிக்கு கிடைத்ததால், ரொம்பவே அப்செட்டாகிவிட்டார்களாம். இருந்தாலும், ஆல்யா மானசாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதை கொடுத்து அவர்களை சேனல் நிர்வாகம் கூலாக்கியிருக்கிறது. விருது பெற்றவர்களின் பட்டியல் இதோ,

1. Best Director Award – நாம் இருவர் நமக்கு இருவர் இயக்குனர் தாய் செல்வம், 2. Best Actor Award – நாம் இருவர் நமக்கு இருவர் ஹீரோ செந்தில், 3. Best Pair Award – நாம் இருவர் நமக்கு இருவர் ஜோடி செந்தில் மற்றும் ரக்ஷா,

4. Best Child Artist Award – மௌனராகம் குழந்தை ஷரின், 5. Best Actress Award – ராஜா ராணி கதாநாயகி ஆல்யா மானசா, 6. Best Comedian Award – ராஜா ராணி நகைச்சுவை நடிகை ஷாப்னம்

7. Best Family Award – பாண்டியன் ஸ்டோர்ஸ், 8. Best Supporting Actress Female – பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், சுஜிதா 9. Budding Young Couple – ஈரமான ரோஜாவே ஹீரோ, ஹீரோயின் – பவித்ரா, திரவியம்