மிகவும் கஷ்டப்படுகிறேன் : மீண்டும் சினிமாவில் நான் நடிக்க வேண்டும் : நடிகை உருக்கம்!!

896

நடிகை தேஜஸ்ஸ்ரீ

கடந்த 2003 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ஒற்றன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ‘சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா” என்ற பாடலை நம்மால் எளிதில் மறந்து விட முடியாது.


‌இந்தப் பாடலில் நடிகை தேஜஸ்ஸ்ரீ நடனமாடி இருப்பார். அடிப்படையில் நடிகை தேஜஸ்ஸ்ரீ ஒரு நடன கலைஞர் ஆவார். இவர் தகதிமிதா, கோடம்பாக்கம், நீயே நிஜம், கள்வனின் காதலி, இம்சை அரசன், நான் அவனில்லை, ஜூட், மதுர உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இறுதியாக பரஞ்சோதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை தேஜஸ்ஸ்ரீ.

இதனையடுத்து இவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் கடந்த 4 ஆண்டுகளாக திரை உலக வாழ்க்கையில் இருந்து விலகியிருந்தார் . ஆனால் தற்போது மீண்டும் திரைப்பட வாய்ப்பிற்காக ஏங்கி வருகிறார்.

தற்போது இவர் ஒரு வீடியோ பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் தன்னுடைய அம்மாவிற்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவரை கூடவே இருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது .

 

ஆகையால் கடந்த சில வருடங்களாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை கவனித்துக் கொள்ள இயலவில்லை ஆனால் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறேன்.

ஆகையால் எனக்கு சிறிய ரோலாக இருந்தாலும் பரவாயில்லை சிறந்த ரோலாக இருந்தால் மட்டும் போதும் , மேலும் திரைப்படம் இல்லாமல் வெப் சீரிசாக ஆக இருந்தாலும் தான் நடிக்க தயார் என்று கூறி அந்த பதிவில் வெளியிட்டுள்ளார்.