சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குகிறதா? எஸ்.ஏ.சந்திரசேகர் ‘புதிர்‘!!

95

பாஜகவில்…………

பாஜகவில் சேரப்போவதாக வந்த தகவலில் உண்மையில்லை என மறுத்தள்ள நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு மாற்றங்கள் அரசியல் கட்சிகளுக்குள் நடைபெற்ற வருகிறது. சில நடிகர், நடிகைகள் பிரபலங்கள் கட்சியில் இணைவதும், கட்சிகளை மாற்றுவது நடந்து வருகிறது.

இதனிடை நடிகர் விஜய் தந்தையுடன் விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் தான் பாஜகவில் சேரப்போவதாக வந்த தகவல் உண்மையில்லை எனவும், பாஜகவில் இணையப்போகிறேனா என்ற கேள்விக்கு இடமே இல்லை என தெரிவித்தார். மேலும் எனக்கென்று தனி அமைப்பு உள்ளது என கூறினார்.

விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும் என தெரிவித்த அவர், மக்கள் அழைக்கும் போது விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும், அவ்வாறு மக்கள் அழைக்கும் போது அரசியலுக்கு வருவது சக்திவாய்ந்ததாக இருக்கும் என தெரிவித்தார்.

தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தவே தனி கவனம் செலுத்தி வருவதாகவும், பாஜகவுடன் இணைப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு வதந்திகள் எழுவது வாடிக்கையான ஒன்று தான் என்ற கருத்து மக்களிடம் நிலவி வருகிறது.