பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று தொடர்: நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு?

71

விஜய் சேதுபதிக்கு அழைப்பு…

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று தொடரில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று தொடரை இயக்க உள்ளதாக இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று க ண் டனங்கள் எ ழுந்த நிலையில் அவர் 800 திரைப்படத்திலிருந்து வி லகினார்.

இந்நிலையில், பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக இயக்க இருப்பதாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க இருப்பதாகவும் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ச ந்தனக் க டத்தல் வீ ரப்பனின் வாழ்க்கையை வ னயு த்தம் என்ற பெயரில் திரைப்படமாக்கியவர் தான் இயக்குநர் ஏஎமஆர் ரமேஷ்.

பிரபாகரன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் இது குறித்து பேச உள்ளதாகவும் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறியுள்ளார்.

800 திரைப்பட ச ர்ச்சையை அடுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று தொடரில் விஜய் சேதுபதி நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.