சனம் ஷெட்டியால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் சுரேஷ்?

70

Big Boss 4…

பஞ்சாயத்துக்கு பேர்போன Big Boss நிகழ்ச்சியில், கடந்த சீசன்களில் Bus stand-இல பெண்களை உரசி அது குறித்து தவறாக பேசி அதன் பிறகு மன்னிப்பு கேட்டும், சரவணனை வெளியே அனுப்பி விட்டார்கள்.

அதன் பிறகு, தற்கொலைக்கு முயன்ற மதுமிதாவும், முதல் சீசனில் மன உளைச்சல் காரணமாக ஓவியாவும், பரணியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இடையிலேயே வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போ இந்த சீசன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்புவதாக நம்ம Content Godown சுரேஷ் கூறி வருவதாகவும் அதேபோல் சுரேஷை வெளியேற்ற பிக்பாஸ் குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இருதரப்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

என்ன இருந்தாலும் அது குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் சனம் ஷெட்டி என்பது அனைவருக்கும் தெரிந்ததே.