ரியோ-ரம்யா குடுமி பிடி சண்டை, ரியோவை மதிக்காமல் இருக்கும் ஷிவானி !

85

பிக்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏன் வந்தோம் எதுக்கு வந்தோம் என்பதை மறந்து அமைதியாக 100 நாட்கள் இருந்து இங்கே எந்த ஓடிவிடலாம் என்கிற ஒரு திட்டத்தோடு வந்த ஆஜித் மற்றும் ஷிவானி நேற்றைய அரக்கர்கள், ராஜ வம்சத்தினர் டாஸ்க்கின் போது ஒருவழியாக ஷிவானி பேசியது மட்டுமின்றி சனம் ஷெட்டியிடம் ஒரு சிறு மோதலிலும் ஈடுபட்டது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது வெளியான புரமோ வீடியோவில் முதல் முதலாக ரியோ-ஷிவானி Groupism விஷயத்துக்காக மோதுகின்றனர்.

இந்த வீட்டில் ஒரு சில நிமிடங்களாவது எல்லோரும் சேர்ந்து இருக்க வேண்டும் என்று ரியோ சொல்ல,

அதற்கு ஷிவானி “ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் என்னிடம் நேரடியாக பேசுங்கள் மறைமுகமாக பேச வேண்டாம்” என்று கூறுகிறார்.

அதன் பின்னர் ஷிவானி, ஆஜித் மற்றும் ரம்யா ஆகிய மூவரும் தனியாகவே இருக்கின்றார்கள் எல்லோரிடமும் சேர மாட்டார்கள் என்று ரியோ குற்றம்சாட்ட, அதற்கு மறுத்து பேசிய ரம்யாவால் ஒரு மோதல் ஏற்படுகிறது.

ஆக நேற்று நடந்தது போல் இன்றும் ஒரு சிறப்பான தரமான சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.