Twitter உலகிற்கு STR கொடுத்த Mass Entry ! இனி Hatersக்குளாம் அள்ளுதான் !

78

நடிகர் சிம்பு…

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு நடித்து வருபவர் நடிகர் சிம்பு. முழுக்க முழுக்க காதல், பாடல், ஷூட்டிங் Punctuality என Controversy – னால் ஃபேமஸ் ஆன ஒரே ஹீரோ சிம்பு மட்டுமே. ஒரு வழியாக லாக் டவுன் காரணமாக இழு இழு என இழுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் துவங்க உள்ள நிலையில்,

தற்போது சிம்புவின் அடுத்த படமான சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க திண்டுக்கல் சென்றுவிட்டார். அதுவும் இல்லாமல் இப்போது உடல் எடையை நன்றாக இளைத்து வேற லெவலில் தயாராகியுள்ளார்.

நேற்று STR-ன் வீடியோ ப்ரோமோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வந்தது. அதாவது அக்டோபர் 22-ம் தேதி காலை 09:09 மணிக்கு சிலம்பரசன் FB, Twitter, Instagram, YouTube என எல்லா சமூக வலைத்தளங்களில் சிம்பு வருகிறார், அதற்கான முன்னோட்ட வீடியோ வெளியானது.

தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடியை அவரின் நெருங்கிய நண்பரான Big Boss மஹத் ராகவேந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ட்விட்டருக்கு அவரை வரவேற்பதாக கூறியிருக்கிறார்.

அதுவும் இல்லாமல் காலை வேறு ஒரு புதிய சர்ப்ரைஸ் ஒன்று இருப்பதாகவும், அதுவரை அவரால காத்திருக்க முடியலை என்று தெரிவித்து உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் தலைவனோட Look Release ஆகபோவது கன்பார்ம் என கொண்டாடுகிறார்கள்.