வெறித்தனமாக உடம்பை குறைத்த சிம்பு – டுவிட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள் !

445

நடிகர் சிம்பு….

3 வருடங்களுக்கு முன், தனது படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், மக்கள் இவரை சமூக வலைதளங்களில் இவரை திட்ட ஆரம்பிக்க, உடனே இவர் Negativity ஜாஸ்தியாக இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் இருந்து விலகினார் சிம்பு.

அதன் பிறகு சிம்புவை சமூக வலைதளங்களில் பார்க்க ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள் ஆனால் அது குறித்து எந்த செய்தியும் வரவில்லை. இந்நிலையில் நேற்று டிவிட்டரில் அடி எடுத்து வைத்துள்ளார்.

இன்று, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் என்று ஒரு வீடியோ மூலம் அறிவித்துவிட்டார்.

சுசீந்திரன் படத்திற்காக 35 கிலோ உடல் எடையை குறைத்துள்ள சிம்புவை பார்க்க ஆசைபட்டார்கள், சொன்னபடி இன்று தரிசனத்தை தந்து விட்டார்கள். ஆனால் சிம்பு வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் முகமே தெரியவில்லை.

முகைத்தை காட்டாதது ஏமாற்றம் தான் என்றாலும் சிம்புவை மீண்டும் பழைய மாதிரி ஒல்லியாக பார்த்ததே போதும் என்று கூறி ரசிகர்கள் #SilambarasanTR என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.