‘RRR’ படத்தில் Junior NTR கதாபாத்திரத்தின் டீஸர் வெளியீடு ! சும்மா தெறிக்குது…!

734

RRR Teaser….

பாகுபலி ஒன்றாம் பாகம் இரண்டாம் பாகம் கொடுத்த வெற்றிகளுக்குப் பிறகு, தற்போது RRR படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி.

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட், ஒலிவா மோரீஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.

சுமார் 450 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தயாராகி வருகிறது. RRR படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக ராஜமெளலி உறுதிசெய்துள்ளார்.

இந்நிலையில் ‘RRR’ படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் கதாபாத்திரத்தின் அறிமுக டீஸர் வீடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

இதில் ஜூனியர் NTR நடிக்கும் பீம் என்ற கதாபாத்திரத்தின் வடிவத்தை 1.30 நிமிட டீஸராக வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன் வெளியான ராம் சரண் கதாபாத்திரத்துக்கான Teaser-இல் ஜுனியர் என்.டி.ஆர் பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். இந்த ஜுனியர் என்.டி.ஆர் Teaser-இல் ராம் சரண் குரல் கொடுத்துள்ளார்.