“இப்படி பண்ணா வெளியில இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க” – அறந்தாங்கி நிஷா கோபம் !

52

அறந்தாங்கி நிஷா…

விடிஞ்ச உடனே எப்போடா 9 மணி ஆகும் என்று Big Boss புராமோவை பார்த்தால் தான் நிம்மதி என பல நெட்டிசன்கள் இருக்கிறார்கள்.

நேற்றைய முதல் புரமோவில் ரம்யா மற்றும் ரியோ சண்டை குறித்து பார்த்தோம். வெளிவந்துள்ள இரண்டாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டில் பட்டிமன்றம் டாஸ்க் நடக்கின்றது.

பட்டிமன்றத்தின் தலைப்பு என்ன என்றால் “பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம் மற்றும் பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம்” இதுல பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம் என்ற தலைப்பில் வேல்முருகன் பேசுகிறார்.

அதேபோல் பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம் என்னும் தலைப்பில் அனிதா, பேசுகிறார். இதுல Professional பட்டிமன்ற பேச்சாளர் அறந்தாங்கி நிஷா பேசியபோது, “புரணி பேசறது அழகுங்க,

ஒருவரது உள்ளத்தையும் உருவத்தையும் உடைக்கும்போது தான் அந்த புரணி அசிங்கம். அந்த புரணியை வெளியில இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க” என்று ஆவேசமாக பேசினார்.