அமேசானில் சூரரை போற்று Release Postponed ! உறுதிப்படுத்திய சூர்யா ! கவலையில் ரசிகர்கள்…!

73

சூரரைப்போற்று…

இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று. ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ளார்.

மாஸ்டருக்கு மாஸ் போட்டியாக திரைக்கு வரும் எனும் எதிர்பார்த்த நிலையில், இந்த மாதம் 30 ஆம் தேதி அன்று Amazon-இல் ரிலீஸ் ஆக இருந்தது. இந்த செய்தி டிவிட்டரில் சூர்யா அவர்கள் அதிகார பூர்வமாக தெரிவித்து இருந்தார்.

ஏற்கனவே நம்ம தலைவரோட படத்தை போன்ல பார்க்கணுமே என்கிற வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு இடி விழுந்துள்ளது. அதாவது இந்த படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாதாம்.

ஏன் என்றால் ஏர்போர்ஸ் சம்பந்தப்பட்ட படமாக இருப்பதால் அவர்களிடம் இருந்து ஒரு NoC கேட்கிறது அமேசான் குழு, அதற்காக சூரிய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

கூடிய விரைவில் அது கிடைத்தவுடன் சூரரைப்போற்று பிரமாண்டமாக ரிலீஸ் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார் சூர்யா.

இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.