பாலாஜிக்கு ‘ஹார்ட்’ சிம்பல் காட்டிய கேப்ரியலா ! என்னடா நடக்குது இங்க ?

88

கேப்ரியலா…

பிக்பாஸ் வீட்டில் இதுவரை பாம்பும் கீரியுமாக இருந்த பாலாஜி முருகதாஸ்-சனம் ஷெட்டி இப்போது சிறிது சிறிதாக ஒரு நல்ல Understanding-க்கு வந்துள்ளார்கள். அவர்கள் இருவருக்குள் சப்போர்ட் செய்கிறார்கள்.

இவர்கள் இருவருக்கும் ஆன அந்த டுபாகூர் சண்டை கமல் வரை போய் ஒன்றுமில்லாமல் போனது, ஆனாலும் அதை நீண்ட நாள் கங்கணமாக சுற்றி வந்தனர். அதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனை சற்றும் குறையவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மியூஸிக்கல் சேர் போட்டியில் சனம் தன்னை புகழ்ந்து 10 பாயிண்ட்கள் தெரிவிக்க வேண்டும் என பாலாஜியிடம் கேட்க, தர்ஷனே தோற்று போகும் அளவுக்கு சனமை விதவிதமாக புகழ்ந்து தள்ளினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன நடக்குது என்று ஒன்றும் புரியாமல் தலையை சொரிந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வாரம் முழுவதும் யார் மிகவும் ஆக்டிவாக இருந்தார்கள் என பிக்பாஸ் கேட்க, பாலாஜி உடனடியாக சனம் பேரை சொன்னார். இதைப்பார்த்து சக போட்டியாளர்களே அதிர்ச்சியானார்கள்.

இதைப்பார்த்த கேப்ரியலா, பாலாஜிக்கு ஹார்ட் சிம்பல் போட்டுக்காட்ட யாரு யாரோட என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.