தேசிய விருது பெற்ற மெகா ஹிட் பட இயக்குநருடன் இணையும் சூர்யா…! இனி கச்சேரி தான்!

101

சூர்யா………..

வாடிவாசல் படத்துக்கு முன் யார் படத்தில் நடிப்பார் என்ற தகவல் கூடவே உலவிக் கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் என்றார்கள் சிலர், வினோத் என்றார்கள் சிலர், விக்ரம்குமார் என்றார்கள் சிலர், ஆனால் இவர்கள் மூவரும் இல்லை.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் தகவல் அதிகார பூர்வமாக வெளி வந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறாராம்.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கியுள்ள பசங்க 2, கடைக்குட்டி சிங்கம் படங்களை தயாரித்துள்ளார் சூர்யா. அதுமட்டுமில்லாமல் பசங்க 2 படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.