”நீ யாரு அதை கேக்குறதுக்கு” – பிக்பாஸ்-ல சனமோடு சண்டை போட்ட சம்யுக்தா !

380

பிக்பாஸ் சீசன் 4…

நவராத்திரியை முன்னிட்டு 4 மணி நேர நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘சுமங்கலிகள்’ பற்றி பேசும்பொழுது அனிதா மற்றும் சுரேஷ் இடையே கருத்து வேறுபாடு வந்தது,

அதன் பிறகு அது மோதலாக மாறியது. இதை தொடர்ந்து நேற்று முழுவதும் இதை தொடர்ந்த இந்த சண்டையில் அனிதா சுரேஷிடம் மன்னிப்பு கேட்டாலும்,

அவர் பேசாமல் ஓடிவிட்டார். அது குறித்து CONFESSION ரூமுக்கு சென்று அனிதா பயங்கர அழுகை.

அந்த வீட்டில் தனிமையாக உணர்வதாகவும், தவறுகள் தன் மீது இருப்பதாக நினைப்பதாகவும் கூறி கதறி அழுகிறார். இதனால் திடீரென அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியானது.

இதில் நேற்று போட்டியாளர்களுக்கு டாஸ்காக தங்க சுரங்கத்தில் இருந்து தங்கம் எடுக்கும் போட்டி வைக்கப்பட்டது.

இதில் நடிகை சனம் ஷெட்டியை பார்த்து, “நீ யாரு அதை கேக்குறதுக்கு” என்று சனத்தை பார்த்து சம்யுக்தா பேசியிருப்பது போல இந்த புரொமோ வெளியானது.