“அஜித் ஒரு மகாத்மா” – Big Boss 4 சுரேஷ் சக்கரவர்த்தி ! வைரலாகும் வீடியோ !

89

சுரேஷ் சக்கரவர்த்தி…

பல நாளிதழ் பத்திரிக்கைகள், பல இணையதள பத்திரிகைகள் கண்டன்ட் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இந்த நேரத்தில் தெய்வமாக வந்து இருக்கிறது இந்த Big Boss-4.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 செம்ம மாஸாக இந்த மாதம் வெற்றிகரமாகவே தொடங்கி இருக்கு. அதிலும் நம்ம Content Godown சுரேஷ் சக்கரவர்த்தி பற்றி தெரிந்துகொள்ள இணையத்தளத்தை வட்டமடித்து வருகிறார்கள்.

அப்படி வட்டமிட்டு கொண்டிருக்கையில் யூட்யூபில் அவர் அளித்த பேட்டி ஒன்று கிடைத்தது. அதில், ஒரு நடிகரின் புகைப்படத்தை அந்த தொகுப்பாளர் காட்ட அவரைப் பற்றி சில வார்த்தைகள் சுரேஷ் சக்கரவர்த்தி கூற வேண்டும்.

அப்படி அஜித்தின் புகைப்படத்தை தொகுப்பாளர் காட்ட, “அஜித் ஒரு மகாத்மா, அவரை நான் ஒரு பேட்டிக்காக இயக்கி இருக்கிறேன். நானும் அவரும் ஒரு படத்தில் நடித்தோம். இன்னொரு படம் நடித்தோம். ஆனால் அதில் என்னையும், அவரையும் அந்த படத்தில் இருந்து தூக்கி விட்டார்கள்.

விஜய்யிடம் சென்று அஜித்தை பற்றி கேட்டால் அவரே, அஜித் சூப்பர் என்றுதான் சொல்லுவார்” என்று தல ரசிகர்களின் ஆதரவை சைலன்டாக பெற்றார் நம்ம சுரேஷ் தாத்தா.