காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை தொடர்ந்து கெளதம் மேனனோடு இணைந்த சூர்யா !

75

சூர்யா…

CORONA காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. கடந்த 15 ஆம் தேதி முதல் 50% சதவீத Occupancy-இல் படத்தை காணலாம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது.

சினிமா சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் தொடங்கிவிட்டது. ஆனாலும் மக்களுக்கு பொழுது போக முடியாமல் அமேசான் நெட்பிளிக்ஸ் OTT Platform-களில் இருக்கும் அனைத்து படங்களையும் Web Series-களையும் பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், புத்தம் புது காலை என்னும் Anthology படத்தை தொடர்ந்து Netflix தற்போது நவரசா என்னும் Anthology படத்தை வெளியிட போகிறார்கள்.

நவரசா ஆந்தாலஜியில் 9 கதைகளை கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இசையமைப்பாளர்களாக ஏ.ஆ.ரஹ்மான், இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்கள்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிக்காத நிலையில், கெளதம் மேனன் இயக்கும் ஒரு பாகத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.இந்த 9 இயக்குனர்களில் கார்த்திக் நரேன் மற்றும் ரதீந்திரன் படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மற்ற இயக்குநர்கள் படங்களின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.