கண் கலங்கி பேசிய அனிதா, சிரிச்சு கிண்டல் செய்த போட்டியாளர்கள்… பரபரப்பான Promo !

405

பிக்பாஸ் சீசன் 4…

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா,

சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய பிரமோவில் அழுகாச்சி டாஸ்க்கில் அனிதாவின் டர்ன் வரும் போது தன்னுடைய கணவர் தனக்காக உருகியதையும், கணவன் மூலமாக தான் முதன் முதலில் ஒரு ஆண் பாசம் கிடைத்தது என்றும் தந்தை என்னை தொட்டு கூட பார்க்கவில்லை என்றும் க்கீச்சு கீச்சு என்று மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.

கடுப்பான சம்யுக்தா, “ரொம்ப Length -‌ஆ போகுது” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டார். அனிதா உடனே “சாரி” என்று கூறிவிட்டு தனது உரையை முடித்துக் கொள்கிறார். உடனே அதற்கு எல்லாரும் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

இப்படி ஓபனாக அசிங்கப்படுத்தியதால் கண்டிப்பாக இன்னிக்கு ஒரு சம்பவம் இருக்கும் என்றே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.