நடிகை தியா மிர்சா
நானும் என் கணவரும் பிரிய அந்த பெண் பிரபலம் தான் காரணம் என பரவும் செய்திகள் உண்மை இல்லை என பாலிவுட் நடிகை தியா மிர்சா விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகை தியா மிர்சா தனது காதல் கணவர் சாஹில் சங்காவை பிரிவதாக அண்மையில் அறிவித்தார். ஆனால் பிரிவுக்கு என்ன காரணம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அன்று மாலையே தனது கணவரான இயக்குநர் பிரகாஷ் கோவிலமுடியை பிரிவதாக பிரபல சினிமா எழுத்தாளர் கனிகா தில்லன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து கனிகாவுக்கும் சாஹிலுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதால் தான் தியா மிர்சா பிரிந்து செல்வதாக செய்திகள் வெளியாகி. இதனை முற்றிலும் மறுத்துள்ள தியா, இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், பொறுப்பில்லாமல் செய்தி வெளியிடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமானது. இதில் மேலும் துரதிர்ஷ்டம் என்னவென்றால் திரைத்துறையை சேர்ந்தவர்களின் பெயர்களை பயன்படுத்தி அவர்களின் தனிமதிப்பு சீர்குலைக்கப்படுகிறது.
பொய்யான தகவலில் ஒரு பெண்ணின் பெயரை பயன்படுத்தியிருப்பதை நான் பொருத்துக்கொள்ள மாட்டேன். நானும், கணவரும் பிரிந்துள்ளது குறித்து வெளியான தகவல்களில் சுத்தமாக உண்மை இல்லை.
நாங்கள் பிரிய மூன்றாவது நபர் யாரும் காரணம் இல்லை என்றார். தியாவின் விளக்கத்தை பார்த்த கனிகா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரொம்ப டீசன்டான நடிகை என்று பெயர் எடுத்துள்ள தியா மிர்சா கனிகா விஷயத்தை கையாண்ட விதமும் பாராட்டுகளை பெற்றுள்ளது.