மன்னிப்பு கேட்ட சன்னிலியோன் : ஏன் தெரியுமா?

840

சன்னிலியோன்

கனடாவை சேர்ந்த ஆபாச நடிகை சன்னிலியோன் தமிழில் வடகறி படத்தில் கவர்ச்சி நடனம் ஆடினார். தற்போது வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

அவர் கவர்ச்சியாக நடிப்பதாக தொடர்ந்து எதிர்ப்புகள் வருகின்றன. சன்னிலியோன் நடன நிகழ்ச்சிகளுக்கும் தடைகள் விதிக்கப்படுகிறது. சமீபத்தில் திரைக்கு வந்த அர்ஜூன் பாட்டியாலா என்ற இந்தி படத்தில் சன்னிலியோன் நடித்துள்ளார்.

இந்த படத்தில் தனது தொலைபேசி எண் என்று ஒரு நம்பரை அவர் கூறுவார். அது டெல்லியை சேர்ந்த புனித் அகர்வால் என்பவருடைய எண் என்பதால் பிரச்சினை ஏற்பட்டது.

சன்னி லியோனிடம் பேச முடியுமா? என்று கேட்டு அவருக்கு தினமும் நூற்றுக்கணக்கான ரசிகர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன. அத்துடன் ஆபாசமாகவும் அவரிடம் பேசி உள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான புனித் அகர்வால், போலீசில் புகார் செய்தார். தனது செல்போன் எண்ணை படத்தில் பயன்படுத்தியதால் எனக்கு போன் செய்து ஆபாசமாக பேசுகின்றனர். இந்த பிரச்சினை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டுக்கு செல்வேன் என்று மனுவில் கூறியிருந்தார்.

இதற்காக சன்னிலியோன் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறும்போது, உங்களுக்கு இதுபோல் தொந்தரவு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்காக மன்னிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.