லாஸ்லியா ஆட்டம் ஆரம்பமா? எதிராக திரும்பிய போட்டியாளர்கள்!!

882

லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் செல்லக் குழந்தையாக ஆரம்பத்தில் கருதப்பட்டவர் லாஸ்லியா. அதனால்தான் அவருக்கு முதல் நாளிலேயே சமூக வலைதள பயனாளர்கள் ஆர்மியை தொடங்கினர்.

சக போட்டியாளளிடமும், மக்களிடமும் நன்மதிப்பை பெற்று வந்த லாஸ்லியா கடந்த 2 வாரங்களாக சக போட்டியாளர்களை வெறுப்பேற்றி வருவதாக தெரிகிறது.

குறிப்பாக கடந்த வார முக்கோண காதல் பிரச்சினையில் திடீரென ‘என்னிடம் யாரும் கதைக்க வேண்டாம்’ என்று அவர் கூறியது அவரிடம் நெருக்கமான பழகியவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.

இதனை மனதில் வைத்து இந்த வாரம் லாஸ்லியாவை அனைவரும் நாமினேஷனில் குறி வைத்துள்ளனர். இதுவரை நாமினேஷனில் சிக்காமல் தப்பித்து வந்த லாஸ்லியா இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியுள்ளார்.

அவரை சரவணன், சாக்சி, ஷெரின் உள்பட ஒரு சிலர் நாமினேஷன் செய்துள்ளதால் இந்த வார நாமினேஷன் பட்டியலில் லாஸ்லியா பெயர் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது.

இருப்பினும் லாஸ்லியாவுக்கு ஆர்மியின் ஆதரவு அதிகம் இருப்பதால் அவர் அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் முதல் லாஸ்லியாவின் ஆட்டம் ஆரம்பமாவதால் நாமினேஷன் படலம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக ஓட்டுகள் வாங்கப்போவது லாஸ்லியாவாகத்தான் இருக்க வேண்டும் என்றும் வெற்றியோ தோல்வியோ லாஸ்லியாவை நிகழ்ச்சியில் கடைசிவரை கொண்டு செல்ல நாம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இப்பொழுதே லாஸ்லியா ஆர்மியினர் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது