அர்ச்சனாவை தொடர்ந்து, Wild Card Entry கொடுத்த சுசித்ரா ! அனல் பறக்கும் லேட்டஸ்ட் Promo !

51

பிக்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் வீட்டில் எந்த சீஸனும் இல்லாமல் இந்த சீசன் சுரேஷ் சக்ரவர்த்தியின் புண்ணியத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் Rule படி நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டு வாரங்களில் ஒரு புதிய போட்டியாளர் அதாவது Wild Card Contestant உள்ளே வர வைத்துள்ளார். அந்த வகையில் VJ அர்ச்சனா உள்ளே வந்து கொளுத்தி போட்டு தனக்கே உரிய பாணியில் கலக்குகிறார்.

தற்போது மற்றுமொரு Wild-card Entry ஆக பிரபல பாடகியும் ரேடியோ ஆர்ஜேவுமான சுசித்ரா வருகை தர இருப்பதாக செய்திகள் வந்தது.

அந்த சமயத்தில், இவர் ஹோட்டல் ரூமில் தனிமை படுத்தப் பட்டிருந்த நிலையில் ஒருநாள் திடீரென நள்ளிரவில், “என்னைக் கொலை செய்ய வர்றாங்க, காப்பாத்துங்க”னு கத்திக்கிட்டே ரிசப்ஷனுக்கு ஓடி வந்தாங்க. உடனே அந்த ஹோட்டல் தரப்பினர், ”இந்த ஹோட்டல் மிகவும் பாதுகாப்பானது,

நீங்கள் நினைப்பது போல் எதுவும் நடந்ததே இல்லை” எனச் சொல்லப்பட்ட போதும், நம்ப மறுத்து அதிக நேரம் ரிசப்ஷனிலேயே இருந்தாராம் சுச்சி, என்றெல்லாம் செய்திகள் வந்தது. ஆனால் இப்போது வெளியான Big Boss Promo-வில் இவர் பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைந்துள்ளார். இவரின் நடவடிக்கைகளை பார்த்தால், ஓவியாவை பார்ப்பது போலவே உள்ளது என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.

ஏற்கனவே சுச்சி லீக்ஸ் உள்பட பல விவகாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன பரபரப்பை ஏற்படுத்துவார் என பொறுத்திருந்து பார்ப்போம்.