திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் திரைப்படங்கள் வெளிவராது – பாரதிராஜா..!

57

பாரதிராஜா…

தமிழகத்தில் திரையரங்குகள் திறந்தாலும் புதிய திரைப்படங்கள் வெளியாகாது என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், திரைப்படத்தை வெளியிட வாங்கப்படும் விபிஎப் எனப்படும் விசுவல் பிரிண்ட் கட்டணத்தை வாரம் ஒருமுறை செலுத்துவதற்கு பதில் ஒரே ஒரு முறை செலுத்த ஒப்புக் கொள்ள வேண்டும்.

என்கிற தங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதால் புதியத் திரைப்படங்களை வெளியிடுதில்லை என முடிவெடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அடுத்த கட்ட முடிவு எடுப்பது குறித்து நாளை அவசர ஆலோசனை நடத்தி முடிவெடுக்கவுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.