தீபிகா படுகோனின் மேனேஜர் “மிஸ்ஸிங்”..! என்சிபி விசாரணைக்கு அழைத்த நிலையில் காணாமல் போனதால் பரபரப்பு..!

53

தீபிகா படுகோன்…

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ், போ தை ப்பொ ரு ள் தொடர்பான வழக்கில் போ தை ப்பொ ரு ள் கட்டுப்பாட்டு பணியகத்தால் (என்சிபி) வி சாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் மீண்டும் அவரை வி சாரிக்க என்சிபி சம்மன் அனுப்பிய நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரிஷ்மா பிரகாஷ் என்.சி.பி. முன் ஆஜராகவோ அல்லது சம்மனுக்கு பதிலளிக்கவோ தவறியதால், தற்போது சம்மன்களை அவரது தாய் மற்றும் குவான் நிறுவன உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாக என்.சி.பி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் வி சா ரணைக்கு வரவழைக்கப்பட்ட பின்னர் கரிஷ்மா பிரகாஷ் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது உண்மைதான் என்று விசாரணை தொடர்பான என்சிபி அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக அக்டோபர் 27’ஆம் தேதி அவர் என்சிபி முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.

முன்னதாக தீபிகாவும் பிரகாஷும் ஒரு முறை விசாரணைக்காக என்சிபி முன் ஆஜராகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தீபிகாவைத் தவிர, போ தை ப்பொ ருள் தொடர்பான வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகைகள் ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோரிடமும் என்சிபி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த மூன்று நடிகைகளின் தொலைபேசிகளையும் என்சிபி கைப்பற்றி தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் போ தை ப்பொ ரு ள் பற்றி சில வாட்சப் உரையாடல்கள் வெளிவந்ததை அடுத்து, அமலாக்க இயக்குநரகத்தின் கோரிக்கையின் பேரில் போ தை ப்பொ ரு ள் சட்ட அமலாக்க நிறுவனம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.