மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து Exclusive வீடியோ Song ரிலீஸ் !

58

மூக்குத்தி அம்மன்…

கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா.

சமீபத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை ஆர்.ஜே. பாலாஜியின் கதை , திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ மூக்குத்தி அம்மன் ‘ ஆகும்.

மூக்குத்தி அம்மன் திரைப்படம் வருகிற நவம்பர் 14ம் தேதி தீபாவளி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும் “ஆடி குத்து” என்ற முதல் சிங்கிள் பாடல் யூடியூபில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் பாடலை LR ஈஸ்வரி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.