பிக்பாஸ் வீட்டுக்குள் அடுத்த எண்ட்ரி ஷிவானியின் முன்னாள் காதலரா? தீயாய் பரவும் தகவல் !

387

ஷிவானி நாராயணன்…

பிக்பாஸ் வீட்டில் இன்னும் சுசித்ரா – அர்ச்சனா பிரச்சனையே ஓய்ந்தபாடில்லை அதற்குள் இன்னொரு Wild Card Entry வரபோகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களான தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் அஸீம்,

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸோயா என்ற பெண்ணை பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டார்.இரண்டு மூன்று ஆண்டுகள் நன்றாக குதூகலமாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது,

கும்மி அடித்தாற்போல் இருவருக்கு இடையே சண்டை ஏற்ப்பட்டு விவாகரத்து செய்ய இருப்பதாக அவருடன் நடித்த நடிகர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

என்ன பிரச்சனை என்றால், பகல் நிலவு சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை, அதான் நம்ம 4 மணி ஷிவானியுடன் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது. அந்த பொண்ணு இப்ப தான் பள்ளிப்படிப்பை முடித்திருக்கு அதற்குள் இருவருக்கு இடையே பழக்கம் ஏற்ப்பட்டு விட்டது, அப்புறம் என்ன இதான் சாக்குன்னு டாப் கியர்ல போய்ட்டாங்க.

இதெல்லாம் எப்போ பெருசா வெடிச்சுதுனா இவர்களுக்கு சிறந்த புதுமுக ஜோடி என்றெல்லாம் அவார்ட் கொடுத்த மறுகணம் வீட்டில் பிரச்சனை பெரிதாக ஆரம்பமானது.

இடையில் என்ன நடந்ததோ ஷிவானி இரட்டை ரோஜா சீரியலுக்கு சென்று விட்டார். இந்த வாரம் ஒரு போட்டியாளரை வெளியேற்றிய மறு கணம் அஸீம் எண்ட்ரி இருக்கும் என கூறப்படுகிறது.

ஆக உள்ளே இருக்கும் பாலாஜி ஷிவானி காதல் ஜோடியை பதம் பார்க்க வருகிறார் ஷிவானி நாராயணின் முன்னாள் காதலரான அஸீம்.