மூக்குத்தி அம்மன்…
நடிகை நயன்தாரா நடிப்பில் 2020 நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகையன்று அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் இறுதிக் காட்சி சுமார் 7500 பேருடன் ஒரே நாளில் படமாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் அடுத்த சில மாதங்களுக்கு இயக்குநர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’,
இயக்குநர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ அல்லது வேறு எந்த பெரிய திரைப்படங்களுக்கும் இதுபோன்ற மக்கள் வெள்ளத்தை வைத்து படப்பிடிப்பு நடத்த இயலாது என்பதை உறுதியாகக் கூறலாம்.
ஏனென்றால், கொரோனா தொற்று ஊரடங்கு தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் படப்பிடிப்பின் இறுதிக் காட்சியை படமாக்கிவிட்டதால்,
மற்ற அனைத்து பகுதிகளையும் திட்டமிட்டபடி முடிக்க முடிந்தது என்று படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.