அப்பாவான காமெடி நடிகர் சதீஷ் ! பூமிக்கு வந்த குட்டி தேவதைக்கு குவியும் வாழ்த்துக்கள் !

104

காமெடி நடிகர் சதிஷ்…

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் சந்தானத்தின் காமெடி குறைந்து போன நிலையில் தற்போது பல்வேறு காமெடி நடிகர்கள் ஆக்கரமித்துள்ளனர். அந்த வகையில் காமெடி நடிகர் சதீசும் ஒருவர்.

காமெடி நடிகர் சதிஷ் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.

அதன் பின், சிக்ஸர் பட இயக்குனரின் தங்கையை கரம்பிடித்து, இன்று அவரின் முதல் பெண் குழந்தையை கையில் ஏந்தியுள்ளார்.

இதை நடிகர் சதீஷ் அவர்களே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் அந்த குட்டி தேவதைக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள்.