க/பெ ரணசிங்கம் மாபெரும் வெற்றி: இயக்குனருக்கு மாருதி காரினை பரிசளித்த தயாரிப்பாளர்!!

67

க/பெ ரணசிங்கம்………..

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே ராஜேஷ் அப்படத்தின் இயக்குனர் விருமாண்டிக்கு மாருதி கார் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த இத்திரைப்படத்தை பெ. விருமாண்டி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். கே.ஜெ.ஆர் நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார்.

க பெ ரணசிங்கம் திரைப்படம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நேரிடையாக ஓடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஊரடங்கு நேரத்தில் படம் வெளியானதால் மக்கள் குடும்பத்துடன் அமர்ந்து வீட்டில் படத்தைப் பார்த்தனர்.

இந்நிலையில் இப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கே.ஜே ராஜேஷ் இயக்குனர் விருமாண்டிக்கு மாருதி xl காரை அன்பு பரிசாக வழங்கியுள்ளார்.