வலிமை திரைப்பட சூட்டிங்கில் கலந்து கொண்டார் அஜித்… படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கே இத்தனை அதிரடியா?

447

அஜித்குமார்…

ஹெச் வினோத் இயக்கத்தில், தல அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.

எஞ்சியுள்ள படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு சென்றுள்ளார். தனது ஹோட்டல் அரங்கில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு தனது பைக்கை ஓட்டி சென்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகியுள்ளது.

ஏற்கனவே வலிமை திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் பைக் சேசிங் காட்சிகளும் நிறைந்திருக்கும் என தெரிய வந்திருக்கும் நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து பைக்கை எடுத்துக்கொண்டு சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

திரைப்படத்தின் கதாநாயகி யார் வில்லன் யார் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை படக்குழுவினர் இன்னமும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.